Wednesday, 5 March 2014

கிறிஸ்தவர்களுக்கு தசமபாகம் கட்டளையிட்டு இருக்கிறாரா? ( Tithe )


கிறிஸ்தவர்களுக்கு தேவன் தசமபாகம் காணிக்கையை கட்டளையிட்டு இருக்கிறாரா? தயவு செய்து படித்து தேவனுடைய சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் முதன் முதலில் ஆபிரகாம் மெல்கிசேதேக் என்பவருக்கு தசமபாகம் கொடுத்தார்.
Gen 14:20
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
பின்பு யாக்கோபு தேவனுக்கு தசமபாகம் கொடுப்பதாக பொருத்தனை பண்ணிக் கொண்டார்
Gen 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

பாருங்கள் பிற்பாடு தேவன் எகிப்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த தம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனை இதை பிரமாணமாகவும் கட்டளையாகவும் கொடுத்தார்
Lev 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
Deu 14:22
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
Deu 14:23
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

அந்த தசமபாகம் லேவியர்களுக்கு கொடுக்கப்பட்டது
Num 18:24
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.

வாங்கக்கூடிய தசமபாகத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும் லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை அவர்கள் கர்த்தருக்காக செலுத்த வேண்டும் 
Num 18:26
நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

கர்த்தருக்காக கொடுக்கப்படும் அந்த ஒரு பங்கு பிரதான ஆசாரியனாகிய ஆரோனுக்கு அது கொடுக்கப்பட வேண்டும் 

Num 18:28
இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.

தசமபாகம் கர்த்தருடைய ஆசாரிய ஊழியம் செய்யும் லேவியர்களுக்கு அது சம்பளமாகும்
Num 18:31
அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.

ஆனால் இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நமக்கு புதிய ஏற்பாட்டில்(உடன்படிக்கையின்) வாரத்தின் முதல் நாளிலே ஞாயிறு) நாம் பிதாவாகிய தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் கட்டளையிட்டு இருக்கிறார்
1Co 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
1Co 16:2
நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

இன்றைக்கு நாம் தேவனுக்கு கொடுக்கும் போது மனதில் நியமித்தபடியே கொடுக்க வேண்டும்.
2Co 9:7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

நாம் கொடிய தரித்திரத்தில் இருந்தாலும் உதாரத்துவமாய் நாம் கொடுக்க முடியும்.
2Co 8:1
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2Co 8:2
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
2Co 8:3
மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.

புதிய கிறிஸ்தவத்தில் எந்த தேவனுடைய பிள்ளைகளாவது தசமபாகம் கொடுத்து இருக்கிறார்களா என்று வேத வசனங்களை தேடிப்பாருங்கள் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

அப்படியானால் இன்றைக்கு தசமபாகம் என்ற பெயரில் கிறிஸ்தவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் கள்ள போதகர்களைப் பற்றியும் கபடமுள்ள அப்போஸ்தலர்களைப் பற்றியும் என்ன?
Phi 3:18
ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
Phi 3:19
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

உங்கள் வரவுக்குத்தக்கதாக உங்கள் மனதிலே நியமித்தபடியே மன உற்சாகமாய் தேவனுக்கு கொடுங்கள். இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாய் இருக்கிறார்
Heb 13:16
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

3 comments:

  1. Excellent: Please check out: http://www.facebook.com/tithingintamil

    http://thasamabaaham.blogspot.com/

    ReplyDelete
  2. தேவனுக்கே மகிமை சாகோ.

    ReplyDelete