Friday, 7 March 2014

இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கிறது?

இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கிறது? 

முதலில் நாம் என்னென்ன மரணங்கள் இருக்கிறது என்பதை பார்ப்போம் 
1.
பூமிக்குரிய வாழ்கையில் நம்முடைய சரீரத்தை விட்டு ஆவி பிரிவதை வேதாகமம் மரணம் என்று அழைக்கிறார்
Ecc 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
Heb 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
இன்னும் அநேக வசனங்கள் இருக்கிறது 

பாருங்கள் இந்த மரணம் நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் பூமியில் வாழக்கூடிய எல்லாருக்கும் இந்த மரணம் நியமிக்கப்பட்டு இருக்கிறது.

2.
இப்பூமிக்குரிய வாழ்க்கையில் பாவம் செய்கின்றபோது அதனிமித்தமாக ஆத்துமா மரித்து போவது ஆவிக்குரிய மரணமாக இருக்கிறது
Rom 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
Eph 2:1
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
Eph 2:5
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; ,,,,,,,
இதைப் போல் இன்னும் அநேக வசனங்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது

3.
இரண்டாம் மரணம் என்பது என்னவாக இருக்கிறது இதைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் வசனங்களில் என்ன சொல்லி இருக்கிறார்
Rev 2:11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

இந்த இரண்டாம் மரணம் என்பது என்ன என்பதைக் குறித்து பிதாவாகிய தேவனே தெளிவாக சொல்லியிருக்கிறார். கீழே உள்ள வசனங்களை பாருங்கள்.
Rev 20:13
சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
Rev 20:14
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
பாருங்கள் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நாளுக்கு பின்பு மரணமும் இன்றைக்கு இருக்கக்கூடிய பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்படுவதுதான் இரண்டாம் மரணம் என்கிறார் 

யாரெல்லாம் இரண்டாம் மரணத்தில் பங்கடைவார்கள்?
Rev 21:8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

இரண்டாம் மரணத்தினால் சேதப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
என்றைக்கும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிபந்தனையோடு கூட தான் இருக்கும் அப்படியானால் இந்த இரண்டாம் மரணத்தினால் நாம் சேதப்படாமல் இருப்பதற்கு தேவன் நம்மிடத்தில் என்ன கட்டளையிட்டு இருக்கிறார்.
Rev 20:6
முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை,,,,.
Rev 2:10
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
Rev 2:11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

ஜெயங்கொண்டால் தான் நாம் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை ஜெயங்கொள்ளவில்லையென்றால் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவோம்

No comments:

Post a Comment