Thursday, 6 March 2014

நாம் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?

நாம் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?


அநேகர் இன்றைக்கு பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு பல வழிகளை போதிக்கிறார்கள். ஆனால் பரலோகத்தின் தேவன் அதற்கான வழிகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறார்
Col 1:14 [
குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
1Ti 1:15
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

பரலோகத்தின் தேவன் இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு பாவ மன்னிப்பை வைத்து இருக்கிறார். அப்படியானால் நாம் அதை எப்படி பெற்றுக் கொள்ள முடியும்?
முதலில் நாம் இயேசு கிறிஸ்துவுக்கு சீஷராக வேண்டும்,இயேசு கிறிஸ்து பரமேறி போவதற்கு முன்பு அவர் அப்படித்தான் கட்டளையிட்டு இருக்கிறார்.
Mat 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ,,,,,,,,
இன்னும் அநேக வசனங்கள் இதற்கு ஆதாரமாக இருக்கிறது

சீஷராகுவதற்கான தகுதிகள் என்ன என்பதை இயேசு கிறிஸ்துவே நமக்கு கொடுத்து இருக்கிறார்
Mat 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
Luk 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்

இயேசு கிறிஸ்துவுக்கு மேலாக நாம் யாரிடத்திலும் அன்பு செலுத்த கூடாது என்று அவர் இந்த வசனத்தில் கட்டளையிட்டு இருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் சிலுவையை எடுத்துக் கொண்டு அவரை பின்பற்றும் போது நமக்கு அநேக பாடுகள் இருக்கும் அதை சகித்து நாம் அவரை பின்பற்ற வேண்டும் 
Luk 14:27
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
நமக்கு இந்த பூமியில் தேவனுக்கு விரோதமாக இருக்கிறவைகளையும் தனக்கு உண்டான எல்லாவற்றையும் நாம் வெறுத்து விட வேண்டும்.
Luk 14:33
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

பாருங்கள் சீஷராகுவதற்கே இவ்வளவு தகுதிகள் தேவைப்படுகிறது பாவமன்னிப்பை பெறுவதற்கு நாம் இன்னும் கிரியைகளை செய்ய வேண்டியதாய் இருக்கிறது. அது என்ன என்பதை வேத வசனங்களோடு பார்ப்போம் 
1.
நம்முடைய பாவத்திலிருந்து முதலில் மனந்திரும்ப வேண்டும்
நாம் இனிமேல் நமக்காக நாம் வாழமல் தேவனுக்காகவும் அவருடைய சித்தத்திற்காகவும் வாழ்வுதுதான் மனந்திரும்புதல் ஆகும் 
Act 17:30
அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
Act 3:20
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
மனந்திரும்புதலுக்கான ஆதாரம் என்னவென்றால் அதற்கான கிரியை செய்ய வேண்டும் 
Act 26:20 ,,,,,,,,
அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
2Pe 3:9 ,,,,,,
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

2.
இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று வாயினால் அறிக்கை செய்ய வேண்டும்
Act 8:37
அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
Rom 10:10
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
Mat 10:32
மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.

3.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும் 
Mat 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mar 16:16
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
Act 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

பாருங்கள் ஒரு மனிதன் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு இந்த வழியைத்தான் தேவன் நமக்கு கொடுத்து இருக்கிறார்.

தண்ணீருக்குள்ளாக முழுகி ஞானஸ்நானம் பெறும் போது தான் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது
Act 22:16
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
ஞானஸ்நானம் பெறும் போது தான் நாம் கிறிஸ்துவை தரித்து கொள்ளுகிறோம்
Gal 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

இந்த வழியில் இரட்சிக்கப்படுகிறவர்களைத் தான் கர்த்தர் தமது சபையிலே சேர்த்து கொண்டு வருகிறார்.
Act 2:47
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

No comments:

Post a Comment