Friday, 7 March 2014

இன்றைக்கு நரகத்தில் யார் இருக்கிறார்கள்?

இன்றைக்கு நரகத்தில் யார் இருக்கிறார்கள்?

இன்றைய கிறிஸ்த உலகில் இருக்கக்கூடிய அநேகர் போதிப்பது மனுஷன் மரித்து போன பிற்பாடு ஒன்று நரகத்திற்கு போகிறான் அல்லது பரலோகத்திற்கு போகிறான் என்று போதிக்கிறார்கள்

இன்னும் சில போதகர்கள் தங்களை தேவன் நரகத்திற்கு கூட்டிக் கொண்டு போய் எல்லாவற்றையும் காண்பித்து நீ பூமிக்கு போய் நரகத்தைப் பற்றியும் அதில் வேதனைப்படக்கூடியவர்களைப் பற்றியும் எச்சரி என்று சொன்னதாக ஆடியோ கேசட் மற்றும் டீவிடி கேசட் கூட வெளியிட்டு இருக்கிறார்கள் இது உண்மையா?

நாம் மனுஷர்கள் போதிக்கக்கூடிய உபபேதசங்களை சோதித்து பார்ப்பதற்கு தேவன் நமக்கு அனுமதி அளித்து இருக்கிறார் 
1Jo 4:1
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
1Th 5:21
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

நாம் எப்படி சோதித்து பார்க்க முடியும் என்றால் அவருடைய வேத வசனங்களை கொண்டு தான் அப்படி செய்ய முடியும்

முதலில் மனுஷன் மரிக்கின்ற போது எங்கே போகிறான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
Act 2:31
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
எந்த ஒரு மனிதனும் மரித்தாலும் அவன் பாதாளத்திற்கு தான் போகிறான். அங்கே இரண்டு பிரிவுகள் இருக்கிறது ஒன்று வேதனையுள்ள ஸ்தலம் இன்னொன்று பரதீசு அல்லது ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படுகிறது
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த போது அவர் பாதாளத்திலே இருக்கிற பரதீசுக்கு சென்றார்.
Luk 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பாருங்கள் சிலுவையில் மனந்திரும்பின பின் மரித்த கள்ளனும் கிறிஸ்துவும் மரித்த போது பரதீசுக்கு தான் சென்றார்கள்.

இன்னொரு உதாரணம் பாருங்கள் 

லாசருவும் ஐசுவர்யவானும் மரித்த போது அவர்கள் எங்கே இருந்தார்கள் பாருங்கள் 
Luk 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
Luk 16:23
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
அப்படியானால் இன்றைக்கு எந்தவொரு மனிதன் மரித்தாலும் ஒன்று பாதாளத்திலே வேதனையுள்ள ஸ்தலத்திலே இருப்பார்கள் அல்லது பரதீசிலே இருப்பார்கள்

அப்படியானால் இன்றைக்கு நரகத்திலே யார் இருக்கிறார்கள்?
நரகம் எப்படி இருக்கும் என்று மனுஷர்கள் நமக்கு சாட்சி கொடுக்க வேண்டியதில்லை ஏனென்றால் தேவனே நரகம் எப்படி சாட்சி கொடுக்கிறார்
Mar 9:47
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
Mar 9:48
அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.

Rev 21:8 .............
இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
அது அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடல் என்று தேவன் குறிப்பிடுகிறார்.
2Pe 2:4
பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
இந்த வேத பகுதியில் நரகம் என்று தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள் ஆனால் கிரேக்க வேதாகமத்தில் அது வேதனையுள்ள ஸ்தலம் என்று தான் இருக்கிறது
Jud 1:6
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்து இந்த பூமியை நியாயந்தீர்க்க இரண்டாம் வருகையில் வரும் போது இந்த உலகத்தை நியாயந்தீர்க்கும் போது அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்களை நரகத்தில் தள்ளுவார்.
Mat 25:41
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
பாருங்கள் இந்த வசனத்தில் கிறிஸ்து உலகத்தின் முடிவில் தான் தமக்கு கீழ்ப்படியாதவர்களையும் பிசாசையும் அவன் தூதர்களையும் நரகத்திலே தள்ளுவார்

Rev 20:13
சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
Rev 20:14
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
Rev 20:15
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

இதில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய சத்தியம் என்னவென்றால் இன்றைக்கு நரகத்திலே யாரும் இல்லை என்று தேவன் தம்முடைய வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார் 

அப்படியென்றால் நரகத்திற்கு போய் விட்டு வந்தோம் அங்கே அநேகர் வேதனைப்படுகிறார்கள் சாத்தான் அவர்களை வாட்டி வதைக்கிறான் என்று பிரசங்கிக்கக் கூடிய கள்ள போதகர்களைக் குறித்து என்ன?
2Pe 2:1
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2Pe 2:2
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2Pe 2:3
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

இப்படி தேவனுடைய வார்த்தைகளை புரட்டக்கூடியவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.

2 comments:

  1. இன்றைக்கு எந்தவொரு மனிதன் மரித்தாலும் ஒன்று பாதாளத்திலே வேதனையுள்ள ஸ்தலத்திலே இருப்பார்கள் அல்லது பரதீசிலே இருப்பார்கள். neeinglea meala sollito ippo illanu soalluringa

    ReplyDelete
  2. Baccarat | Learn How to play with the best dealers - FBS
    For example, if the dealer rolls an odd number and the dealer rolls the number two 메리트카지노 of the two bets, then the 제왕카지노 dealer is dealt two febcasino cards.

    ReplyDelete