Friday, 7 March 2014

தேவன் கட்டளையிட்டதை செய்யாமல் இருந்தாலும் பாவம்

தேவன் கட்டளையிட்டதை செய்யாமல் இருந்தாலும் பாவம், தேவன் கட்டளையிடாத எதுவொன்றையும் செய்வதும் பாவம் என்பது உங்களுக்கு தெரியுமா?


சபையில் ஆண்களும் கூடி வந்து இருக்கும் போது பெண்கள் ஆண்களுக்கு போதிக்க தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறாரா?
அதைக்குறித்து நாம் வேத வசனத்தோடு இன்றைக்கு கற்றுக் கொள்ளுவோம்,
ஒருவேளை அநேகருக்கு இந்த சத்தியங்கள் பிடிக்காமல் கூட போகலாம், ஆனால் தேவனுடைய சத்தியங்கள் ஒரு போதும் மாறாது,அது கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்று தான் இருக்கிறது.
சபையிலே ஆண்களுக்கு போதிப்பதற்கு தேவன் அனுமதி கொடுக்கவில்லை, 1 கொரி 14:34,35 வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுலைக் கொண்டு அப்படித்தான் சொல்லுகிறார் 
34,
சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்திரவில்லை, அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும், வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35,
அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கடவர்கள், ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே
பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமேஎன்று. எவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் பாருங்கள்.
மேலும் பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுலைக் கொண்டு தீமோத்தேயுவுக்கு எழுதும்போது 1தீமோத்தேயு 2:11.12,13,14,15 வசனங்களில் இந்த சத்தியத்தை வலுயுறுத்தி ஏன் ஆண்களுக்கு போதிக்கக் கூடாது என்பதைக் குறித்தும் எழுதுகிறார். வசனங்களை படித்து பாருங்கள், ஏனென்றால் கிறிஸ்துவின் வருகையில் அவருடைய வசனங்கள் தான் நம்மை நியாயந்தீர்க்கும் (யோவான் 12:48)
11,
ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக் கொள்ளக்கடவள்,
12,
உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்திரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டும் 
என்று சொல்லி பின் வரும் வசனங்களில் எதற்காக அவள் ஆண்களுக்கு உபதேசம் பண்ணக்கூடாது என்ற காரணத்தை 13,14,15 வசனங்களில் அதை தெளிவு படுத்துகிறார்
ஆனால் பெண்களாக கூடி வரும் போது பெண்கள் பெண்களுக்கு போதிக்கலாம் அதை தேவன் அனுமதிக்கிறார். 
1
கொரி 11:5 வசனத்தில் அதை அனுமதிக்கிறார்
ஆனால் ஒரு ஆண் அங்கு இருக்கக்கூடிய பட்சத்தில் ஸ்திரீகள் போதிப்பதற்கு தேவன் அனுமதிப்பதில்லை.

சபை கூடுகையில் ஆண்களோடு சேர்ந்து பாடும்படி தேவன் அனுமதி கொடுக்கிறார்
எபேசியர் 5:19.20. கொலோசெயர் 3:16.17 வசனங்களை வாசிக்கவும்

3 comments:

  1. உபாகமம் 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,

    ReplyDelete

  2. நெகேமியா 10:38 லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.

    ReplyDelete
  3. உபாகமம் 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,

    ReplyDelete