Saturday, 1 March 2014

இயேசுவின் இரண்டாம் வருகை

இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது சம்பவிக்கும்? என்ன சம்பவிக்கும்? எப்படி சம்பவிக்கும்?

முதலில் மனுஷனுக்கு என்ன நியமிக்கப்பட்டு இருக்கிறது?
Heb 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
ஒவ்வொரு மனுஷனுக்கும் நியாயத்தீர்ப்பு நியமிக்கப்பட்டு இருக்கிறது

கிறிஸ்து எதற்காக வருகிறார்?
Act 17:31
மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
இயேசு கிறிஸ்து பூமியை நீதியாய் நியாயந்தீர்ப்பதற்காக வருகிறார் என்று இந்த வசனம் நமக்கு சொல்லுகிறது

Heb 9:28 ,,,,,,,,,,,
தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
இயேசு கிறிஸ்து தமக்காகக் காத்துக் கொண்டுடிருக்கிறவர்களுக்கு நித்திய இரட்சிப்பை அருளவும் வரப்போகிறார்

பிதாவானவர்(தேவன்) ஏன் அவரைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்க வேண்டும்?
Joh 5:22
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

அவருடைய வருகை எப்படி இருக்கும்?
கிறிஸ்து மூன்று விதமான மகியோடு வரப்போகிறார் (Luk 9:26)
கிறிஸ்துவின் மகிமை 
பிதாவின் மகிமை
தேவ தூதர்களின் மகிமை 

இயேசு கிறிஸ்து பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்

1Th 4:16
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்,,,,,

கிறிஸ்து வரும் போது என்ன சம்பவிக்கும்?
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் (யோவான் 5:28,29, 1கொரி 15:22,23)
1Th 4:16 .........
அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1Th 4:17
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
1Co 15:51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
1Co 15:52
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
Rev 20:13
சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

ஒரு நிமிஷத்திலே எல்லாரும் மறுரூபமான பிற்பாடு என்ன சம்பவிக்கும் பாருங்கள்
2Pe 3:10
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
பூமியும் அதின் கிரியைகளும் எரிந்து அழிந்து போய் விடும் 

அப்படியானால் நமக்கு எங்கே நியாயத்தீர்ப்பு?
1Th 4:17
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

பாருங்கள் நமக்கு வானத்தின் கீழே, மேகத்தின் மேல் தான் நமக்கு நியாயத்தீர்ப்பு இருக்கிறது.

அங்கே என்ன சம்பவிக்கும்?
ஜனங்களை இரண்டாக பிரிப்பார் ஒன்று செம்மறியாடுகள்(தேவனுடைய பிள்ளைகள் இன்னொன்று வெள்ளாடுகள் (பிசாசின் பிள்ளைகள்)
Mat 25:32
அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
Mat 25:33
செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

யாருக்கெல்லாம் நியாயத்தீர்ப்பு?
1.
தேவனை அறியாதவர்களுக்கும்(தேவன் இல்லையென்று மதிகேடர்களுக்கு) அவருடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாதவர்களுக்கும் 2தெச 1:7-8)
2.
சபையில் இருந்து கொண்டு மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்களுக்கு (எபி 10:26-29)
3.
கர்த்தருடைய பந்தியில் அபாத்திரமாய் பங்கு பெறுகிறவர்கள் (1கொரி 11:29)
4.
நியாத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில்(சபையில்) முதலில் துவங்கும் (1பேது 4:17)

இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை கர்த்தரென்று ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாம் நியாத்தீர்ப்பின் நாளில் இயேசுவை கர்த்தரென்று அறிக்கை செய்வார்கள்
Phi 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
Phi 2:10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
Phi 2:11
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

தேவன் இல்லையென்று சொல்லும் மதிகேடர் எல்லாம் அந்த நாளிலே தேவனை மகிமைப்படுத்துவார்கள்
1Pe 2:12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் பிதாவின் சித்தத்தை செய்யாமல் அற்புதங்களையும் செய்து பிசாசுகளை துரத்தின கூட்டத்தார் கிறிஸ்துவினால் புறகணிக்கப்படுவார்கள்
Mat 7:22
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Mat 7:23
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
அந்த நியாத்தீர்ப்பின் நாளிலே அப்போஸ்தலர்களுக்கு இஸ்ரவேலை நியாயந்தீர்க்கும் அதிகாரத்தை கிறிஸ்து கொடுப்பதை போல் இந்த வசனம் சொல்லுகிறது
Mat 19:28
அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பிதாவுக்கு சித்தாமானால் கிறிஸ்துவின் வலது பக்கத்தில் செம்மறியாடுகளாக நாம் நிற்கும் போது இயேசு கிறிஸ்து உலகத்தையும் (வெள்ளாடுகளை) கீழ்ப்படியாத தேவ தூதர்களை நியாயத்தீர்க்கும் போது அவரோடு சேர்ந்து நாமும் அவர்களை நியாந்தீர்க்கிறோம்
1Co 6:2
பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
1Co 6:3
தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?
அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?

கிறிஸ்துவின் வருகை எப்போது இருக்கும்?
பூமியில் வாழக்கூடிய எந்த மனுஷக்கும் தெரியாது பரலோகத்தில் இருக்கிற தேவ தூதர்களுக்கும் தெரியாது 
Mat 24:36
அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

இயேசு கிறிஸ்துவுக்கும் கூட எப்போது இருக்கும் என்று தெரியாது
Mar 13:32
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

அவருடைய வருகை யாருக்கும் தெரியாததால் (பிதா தவிர) நாம் எப்படி இருக்க வேண்டும்?
இயேசு கிறிஸ்து எப்போது வேண்டுமானலும் வரலாம்
Mar 13:33
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
Mar 13:34
ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான்.
Mar 13:35
அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
Mar 13:36
நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
Mar 13:37
நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

1 comment:

  1. Harrah's casino to go public - Aljordan14 retromegabit
    Harrah's air jordan 18 retro outlet will not run 세리에 a a casino jordan 1 retro high og womens in the Ak-Chin area. The casino will have a air jordan 18 retro varsity red super site gaming floor at Harrah's in Ak-Chin Village. how can i order air jordan 18 retro men red

    ReplyDelete